இந்தியாவில் ஒரு கோடி முதியோருக்கு ஞாபகமறதி நோய் இருக்கலாம் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள சுர்ரே பல்கலைக்கழகம், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், மிச்சிகன் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி ஆகியவற்றை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து முதியோர் குறித்து ஒரு ஆய்வு நடத்தினர். இதற்காக 31 ஆயிரத்து 477 முதியோரை ஆய்வுக்கு பயன்படுத்தினர். அதில் இந்தியாவில் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய முதியோரில் 1 கோடியே 8 லட்சம் பேருக்கு 'டெமன்ஷியா' என்ற ஞாபகமறதி நோய் இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. இது இந்திய மக்கள்தொகையில் 8.44 சதவீதம் ஆகும்.
மேலும் 2050-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 60 வயதை தாண்டியவர்களில் கணிசமானோருக்கு ஞாபகமறதி நோய் ஏற்படும் என்றும், அதாவது இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 19.1 சதவீதம் பேருக்கு இந்நோய் ஏற்பட்டு இருக்கும் என்றும் இந்த ஆய்வு கணித்துள்ளது.














