உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான சோமாட்டோ நேற்று ஒரு நாள் முழுவதும் வட இந்தியாவில் அசைவ உணவு வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதில் வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நேற்று அசைவ உணவு வழங்கப்படவில்லை. இது குறித்து சோமேட்டோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில் அரசாங்க உத்தரவிற்கு ஏற்ப உத்தரப்பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் அசைவ உணவு வழங்கப்படுவது நேற்று ஒரு நாள் நிறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய உணவு சங்கத்தின் உத்தரபிரதேச தலைவர் இதற்கு முன்னதாக ஜனவரி 22ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்கள் சைவ உணவை மட்டுமே வழங்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.