கலைமாமணி விருதாளர்களுக்கு ஒரு லட்சம் பொற்கிழி

September 29, 2023

தமிழகத்தில் வறிய நிலையில் உள்ள கலைமாமணி விருது பெற்றவர்களுக்கு மு.க ஸ்டாலின் தலா ஒரு லட்சம் வீதம் பொற்கிழிகளை வழங்கினார். தமிழகத்தில் கலைமாமணி விருது பெற்றவர்கள் சிலர் ஏழ்மை நிலையில் இருப்பதாக தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இவர்களுக்கு அரசு உதவ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் கலைமாமணி விருது பெற்ற 10 பேருக்கு தலா ஒரு லட்சம் வீதம் வழங்கினர். மேலும் 500 கிராமிய கலைஞர்களுக்கு இசைக்கருவிகள் மற்றும் ஆடை அணிகலன்கள் வாங்க […]

தமிழகத்தில் வறிய நிலையில் உள்ள கலைமாமணி விருது பெற்றவர்களுக்கு மு.க ஸ்டாலின் தலா ஒரு லட்சம் வீதம் பொற்கிழிகளை வழங்கினார்.
தமிழகத்தில் கலைமாமணி விருது பெற்றவர்கள் சிலர் ஏழ்மை நிலையில் இருப்பதாக தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இவர்களுக்கு அரசு உதவ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் கலைமாமணி விருது பெற்ற 10 பேருக்கு தலா ஒரு லட்சம் வீதம் வழங்கினர். மேலும் 500 கிராமிய கலைஞர்களுக்கு இசைக்கருவிகள் மற்றும் ஆடை அணிகலன்கள் வாங்க பத்தாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. மேலும் நலிந்த நிலையில் உள்ள 1000 கலைஞர்களுக்கு மாதம் தோறும் ரூ. 3000 வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இதற்கு அடையாளமாக நான்கு கலைஞர்களுக்கு நிதி உதவிக்கான ஆணையமும் வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மீன்வளப் பொறியியல் கல்லூரியில் 14 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவ மாணவியர் விடுதி கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu