பஞ்சாப் முகாமில் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

April 13, 2023

பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் நேற்றிரவு மேலும் ஒரு ராணுவ வீரர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். பஞ்சாப் மாநிலம் பதின்டாவில் உள்ள ராணுவ முகாம் நாட்டின் மிகப் பெரிய ராணுவ நிலையத்தில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இதில் தூங்கி கொண்டிருந்த சாகர் பானே (25), யோகேஷ் குமார் (24), சந்தோஷ் நாகரால் (25), கமலேஷ் (24) ஆகியோர் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு உயிரிழந்தனர். உயிரிழந்த வீரர்களில் இருவர் தமிழ்நாட்டையும் […]

பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் நேற்றிரவு மேலும் ஒரு ராணுவ வீரர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

பஞ்சாப் மாநிலம் பதின்டாவில் உள்ள ராணுவ முகாம் நாட்டின் மிகப் பெரிய ராணுவ நிலையத்தில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இதில் தூங்கி கொண்டிருந்த சாகர் பானே (25), யோகேஷ் குமார் (24), சந்தோஷ் நாகரால் (25), கமலேஷ் (24) ஆகியோர் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு உயிரிழந்தனர். உயிரிழந்த வீரர்களில் இருவர் தமிழ்நாட்டையும் இருவர் கர்நாடக மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பதிண்டா முகாமில் நேற்று இரவு துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் மேலும் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். தனது துப்பாக்கியை சரிபார்க்கும் போது தவறுதலாக குண்டு பாய்ந்து லகு ராஜ் சங்கர் என்பவர் உயிரிழந்துள்ளதாக ராணுவ அதிகாரி குர்தீப் சிங் உறுதிப்படுத்தியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu