இன்று மீண்டும் ஒரே நாடு ஒரே தேர்தல் விவாத குழு தொடங்கியது.
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல்கள் நடத்தும் நோக்கில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் முன்வைக்கப்பட்டது. இதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அதன் அறிக்கையின் அடிப்படையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையடுத்து, பாஜக எம்பி பிபி சவுத்ரி தலைமையில் பாராளுமன்ற கூட்டு குழு (ஜேபிசி) அமைக்கப்பட்டது. இந்த குழுவின் பதவிக்காலம் 2025 மழைக்காலக் கூட்டத்தொடரின் கடைசி வாரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று அந்த குழு மீண்டும் கூடியது. பிபி சவுத்ரி, “மக்களின் கருத்துக்களை நேரில் சென்று கேட்க குழு விரும்புகிறது” என்று கூறினார்.














