டெல்லியில் காங்கிரசுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு

February 14, 2024

இந்தியா கூட்டணி தர்மத்தை மனதில் கொண்டு டெல்லியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடத்தை வழங்குவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. விரைவில் பாராளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதில் ஆளும் பாஜகவை எதிர்ப்பதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன. அதன்படி காங்கிரஸ் கட்சியுடன் சீட்டு பங்கீடு தொடர்பாக அதிகாரப்பூர்வமாக இரண்டு சந்திப்புகள் தவிர வேறு எந்த சந்திப்பும் இதுவரை நடைபெறவில்லை. காங்கிரஸ் தலைவர்களுக்கு அடுத்த கூட்டம் பற்றி ஏதும்.இந்த நிலையில் அசாமில் […]

இந்தியா கூட்டணி தர்மத்தை மனதில் கொண்டு டெல்லியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடத்தை வழங்குவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

விரைவில் பாராளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதில் ஆளும் பாஜகவை எதிர்ப்பதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன. அதன்படி காங்கிரஸ் கட்சியுடன் சீட்டு பங்கீடு தொடர்பாக அதிகாரப்பூர்வமாக இரண்டு சந்திப்புகள் தவிர வேறு எந்த சந்திப்பும் இதுவரை நடைபெறவில்லை. காங்கிரஸ் தலைவர்களுக்கு அடுத்த கூட்டம் பற்றி ஏதும்.இந்த நிலையில் அசாமில் மூன்று வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ள நிலையில் இந்தியா கூட்டணி அவர்களை ஏற்கும் எனவும் நம்புவதாக ஆம் ஆத்மி கட்சி எம்.பி சந்தீப் பதக் தெரிவித்துள்ளார்.மேலும் காங்கிரஸ் கட்சிக்கு டெல்லியில் கூட்டணி தர்மத்தை மனதில் கொண்டு ஒரு இடத்தை வழங்க முன் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதன்படி காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் ஆம் ஆத்மி கட்சி ஆறு இடங்களிலும் போட்டியிட உள்ளது. கோவா மற்றும் மற்றும் குஜராத்தில் தலா 1 வேட்பாளரை அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu