புடினின் உக்ரைன் உரைக்கு பின் ரஷ்யாவிலிருந்து ஒருவழி விமானங்கள் அவசரமாக வெளியேறுகின்றன

September 22, 2022

புடினின் உக்ரைன் அச்சுறுத்தலுக்குப் பிறகு  ரஷ்யாவிலிருந்து ஒருவழி விமானங்கள் அவசரமாக வெளியேறுகின்றன. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது படை பலத்தைப் பெ௫க்க ராணுவப்பயிற்சி பெற்றவர்களை படையில் இணையுமாறு அறிக்கை விடுத்தார். ஜனாதிபதியின் உரைக்குப்பின் இராணுவச் சட்டம் சுமத்தப்படலாம் என்றும் போரிடும் வயதுடைய ஆண்கள் ரஷ்யாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற அச்சம் நிலவி வருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன. அதையடுத்து நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக ரஷ்யாவிலிருந்து மக்கள் வெளியேற ஒருவழி விமானங்கள் இயங்கவுள்ளன. உக்ரைன் […]

புடினின் உக்ரைன் அச்சுறுத்தலுக்குப் பிறகு  ரஷ்யாவிலிருந்து ஒருவழி விமானங்கள் அவசரமாக வெளியேறுகின்றன.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது படை பலத்தைப் பெ௫க்க ராணுவப்பயிற்சி பெற்றவர்களை படையில் இணையுமாறு அறிக்கை விடுத்தார். ஜனாதிபதியின் உரைக்குப்பின் இராணுவச் சட்டம் சுமத்தப்படலாம் என்றும் போரிடும் வயதுடைய ஆண்கள் ரஷ்யாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற அச்சம் நிலவி வருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன. அதையடுத்து நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக ரஷ்யாவிலிருந்து மக்கள் வெளியேற ஒருவழி விமானங்கள் இயங்கவுள்ளன.

உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பை புடின் அறிவித்ததிலிருந்து ரஷ்யாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. புடின் உக்ரைனின் எதிர்தாக்குதலைச் சமாளிக்கவும், ராணுவ பலத்தை அதிகரிப்பதற்காகவும் , படையில் இணையுமாறு 300,000 வீரர்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில் ரஷ்ய மக்கள் பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேற வழியின்றி தவித்தனர். இந்நிலையில் உலகளாவிய விமான கண்காணிப்பு சேவையான பிலைட் ரேடார் 24 (FlightRadar) பகிர்ந்த வீடியோவில், ஒருவழி விமானங்கள் இயங்குவதை காட்டியது. விமானங்களை வாங்குவதற்கான ரஷ்யாவின் பிரபல வலைத்தளமான' ஏவியசேல்ஸ் '- க்கான தேடல்கள் அதிகரித்ததும் தெரிய வந்துள்ளது. அதன் விளைவாக விமான டிக்கெட்டுகள் விலை உயர்ந்தன. இ௫ப்பினும் அனைத்து டிக்கெட்களும் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என விமானம் மற்றும் பயண முகவர் தரவு தெரிவித்துள்ளது.

முன்னதாக, புடின் தொலைக்காட்சி தேசிய உரையில், 'நமது நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அச்சுறுத்தப்படும்போது, ​​ரஷ்யாவையும், நமது மக்களையும் பாதுகாக்க நாங்கள் நிச்சயமாக அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம்" என்று கூறினார். இது ஒரு முட்டாள்தனம் அல்ல என்றும் குறிப்பிட்டார்.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu