பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் நிறுவனத்தின் 12 வரிசை கைபேசிகள் இந்திய சந்தையில் வெளியாகி உள்ளன.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய வெளியீடான 12 வரிசை ஸ்மார்ட்போன் பல்வேறு நவீன அம்சங்களை கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 இயங்கு தளத்தின் ஆக்சிஜன் ஓ எஸ் 14 மூலம் இந்த கைபேசிகள் இயங்குகின்றன. 12 ஜிபி மற்றும் 16 ஜிபி ரேம் வசதியுடன், 256 ஜிபி மற்றும் 512 ஜிபி சேமிப்பு திறன் கொண்டு இரு வேறு வேரியண்ட்டுகளில் கைபேசிகள் வெளியாகி உள்ளன. இவற்றின் விலை முறையே 64999 மற்றும் 69999 ரூபாய் என சொல்லப்பட்டுள்ளது. இதில், 64 மெகாபிக்சல் கேமரா, 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இடம்பெற்றுள்ளதால், இந்த கைபேசி பெரும் ஆதரவு பெற்று வருகிறது. இந்த கைபேசிக்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 30 ஆம் தேதி முதல் விற்பனை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணைய வர்த்தகம் மூலம் கைப்பேசி வாங்குவோருக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.