இந்தியாவில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் அக்டோபர் 31-ஆம் தேதி சீனாவில் ஒன்பிளஸ் 13 வரிசை கைபேசிகள் வெளியிடப்பட உள்ளது. மைக்ரோ-குவாட்-கர்வ்டு டிஸ்ப்ளே மற்றும் வட்ட வடிவ கேமரா மாட்யூல் போன்ற புதிய மாற்றங்களுடன் இவை வெளியாகும் என்று கூறப்படுகிறது.
புதிய மாடல் கைபேசியின் வடிவமைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, முந்தைய மாடல்கள் போலல்லாமல், புதிய ஸ்மார்ட்போனில் வட்ட வடிவம் கொண்ட கேமரா ஐலேண்ட் தனியாக இடம்பெறும். புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனிலும் ஹேசில்பிலாடு பிராண்ட் கேமராக்களே வழங்கப்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போன் வெள்ளை, கருப்பு மற்றும் நீலம் என மூன்று வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கும். ஒன்பிளஸ் 13 மாடலில் குவால்காம் நிறுவனத்தின் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சோனியின் 50MP LYT-808 சென்சார், f/1.6 பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா-வைடு லென்ஸ், 3x ஆப்டிகல் ஜூம் வசதி, 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.