ஒன் பிளஸ் கைபேசியின் குறிப்பிட்ட மாடலுக்கு அதிரடியாக விலை குறைக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன் பிளஸ் நார்ட் சிஇ 3 லைட் மாடல் கைபேசி கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகமானது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் பட்ஜெட் கைபேசியாக இது அறியப்படுகிறது. இந்திய சந்தையில் இதன் விலை நிரந்தரமாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 8 ஜிபி ரேம் 128 ஜிபி சேமிப்பு திறன் கொண்ட கைபேசியின் விலை 19999 ரூபாயிலிருந்து 17999 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 21999 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த 8 ஜிபி ரேம் 256 ஜிபி சேமிப்பு திறன் கொண்ட ஒன்பிளஸ் நார்ட் சிஇ 3 லைட் மாடல் கைபேசி இனிமேல் 19999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் உடன் அறிமுகமான இந்த கைபேசிக்கு, ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஆக்ஸிஜன் ஓஎஸ் அப்டேட்டுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்த கைபேசியில் 108 மெகாபிக்சல் கேமரா வசதி மற்றும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.