இந்திய சந்தையில் ஒன் பிளஸ் நார்ட் சிஇ 4 மாடல் கைப்பேசி வெளியாகி உள்ளது. இதன் ஆரம்ப விலை 24999 ஆக சொல்லப்பட்டுள்ளது. இது நத்திங் போன் 2 மாடலுக்கு நேரடி போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது.
ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தில் செயல்படும் ஒன் பிளஸ் நார்ட் சிஇ 4 கைபேசி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரேஷன் 3 சிப்செட் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம் திறன் கொண்ட இந்த கைபேசி, சேமிப்பு திறன் அடிப்படையில் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என 2 வேரியண்டுகளில் வெளியாகியுள்ளது. இதில் 15 மெகாபிக்சல் பின்பக்க கேமரா மற்றும் 16 மெகாபிக்சல் முன்பக்க கேமரா உள்ளது. மேலும், 5500 எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்டுள்ளது.