இந்தியாவில், சாட்டிலைட் பிராட்பேண்ட் சேவைகளை தொடங்குவதற்கான ஒப்புதலை ஒன் வெப் நிறுவனம் வென்றுள்ளது.
பார்தி குழுமத்தை சேர்ந்த ஒன் வெப் நிறுவனம், குறைந்த உயரத்தில் நிறுவப்படும் செயற்கைக்கோள்களை செலுத்தி வருகிறது. தற்போது இந்தியாவின் விண்வெளி அமைப்பு, ஒன் வெப் செயற்கைக்கோள் இணைப்பை செயல்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில், இதற்கான அனுமதி பெறும் முதல் நிறுவனம் ஒன் வெப் ஆகும். மேலும், இந்திய அரசு செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் தொடர்பான ஒதுக்கீடுகளை வெளியிடும்போது, ஒன் வெப் நிறுவனம் வர்த்தக ரீதியிலான செயற்கைக்கோள் இணைப்பை கொண்டு வரும் என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய பார்தி குழும தலைவர் சுனில் பார்தி மிட்டல், “டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முக்கிய மைல் கல்லாக ஒன் வெப் நிறுவனத்திற்கான அனுமதி உள்ளது” என கூறியுள்ளார். எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனமும் இந்தியாவின் ஒப்புதலை பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.