ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் 40 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய ஒன் வெப்

January 11, 2023

பார்தி குழுமத்தைச் சேர்ந்த ஒன் வெப் நிறுவனம், மேலும் 40 செயற்கை கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியுள்ளது. இதன் மூலம், நிறுவனம் திட்டமிட்டுள்ள செயற்கைக்கோள் கூட்டமைப்பு உருவாக்கப் பணியில், 80% செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கணவரல் ஏவுதளத்தில் இருந்து இந்த செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ளன. ஒன் வெப் நிறுவனத்திற்கு, தற்போது 542 குறைந்த சுற்றுவட்ட பாதை செயற்கை கோள்கள் உள்ளன. இந்நிலையில், தற்போது, 16 வது முறையாக செயற்கைக்கோள்களை […]

பார்தி குழுமத்தைச் சேர்ந்த ஒன் வெப் நிறுவனம், மேலும் 40 செயற்கை கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியுள்ளது. இதன் மூலம், நிறுவனம் திட்டமிட்டுள்ள செயற்கைக்கோள் கூட்டமைப்பு உருவாக்கப் பணியில், 80% செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கணவரல் ஏவுதளத்தில் இருந்து இந்த செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ளன.

ஒன் வெப் நிறுவனத்திற்கு, தற்போது 542 குறைந்த சுற்றுவட்ட பாதை செயற்கை கோள்கள் உள்ளன. இந்நிலையில், தற்போது, 16 வது முறையாக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி நிறுவனம் சாதனைப் படைத்துள்ளது. இதுகுறித்து பேசிய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நீல் மாஸ்டர்சன், ‘இந்த செயற்கைக்கோள்கள் மூலம் சர்வதேச வர்த்தக இணைப்பு மற்றும் இதர சேவைகள் மேம்படுத்தப்படும்’ என்று கூறினார். முன்னதாக, கடந்த அக்டோபர் மாதத்தில், இஸ்ரோ ராக்கெட் மூலம், 36 ஒன் வெப் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu