ஓஎன்ஜிசிக்கு 248 கோடி இழப்பு

May 30, 2023

இந்தியாவின் முன்னணி எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ஓஎன்ஜிசி, கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், 247.7 கோடி ரூபாய் நிகர இழப்பை பதிவு செய்துள்ளது. இதுவே, கடந்த 2022 ஆம் நிதி ஆண்டின் இதே காலாண்டில், 8859.54 கோடி ரூபாய் நிகர லாபம் பதிவு செய்யப்பட்டிருந்தது. எனவே, இந்த இழப்புக்கு முக்கிய காரணமாக மத்திய அரசின் சேவை வரி விதிப்பு கூறப்பட்டுள்ளது. கடந்த காலாண்டில், சேவை வரிக்காக மட்டுமே 12107 கோடி ரூபாயை ஓஎன்ஜிசி […]

இந்தியாவின் முன்னணி எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ஓஎன்ஜிசி, கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், 247.7 கோடி ரூபாய் நிகர இழப்பை பதிவு செய்துள்ளது. இதுவே, கடந்த 2022 ஆம் நிதி ஆண்டின் இதே காலாண்டில், 8859.54 கோடி ரூபாய் நிகர லாபம் பதிவு செய்யப்பட்டிருந்தது. எனவே, இந்த இழப்புக்கு முக்கிய காரணமாக மத்திய அரசின் சேவை வரி விதிப்பு கூறப்பட்டுள்ளது. கடந்த காலாண்டில், சேவை வரிக்காக மட்டுமே 12107 கோடி ரூபாயை ஓஎன்ஜிசி ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே, மத்திய அரசின் சேவை வரி விதிப்புக்கு எதிராக, ஓஎன்ஜிசி நீதிமன்ற வழக்கு தொடர்ந்துள்ளது.

நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை படி, கடந்த காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 5.2% உயர்ந்து, 36293 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2023 ஆம் நிதி ஆண்டில் ஒட்டுமொத்தமாக, நிறுவனத்தின் நிகர லாபம் 38829 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.7% குறைவாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu