இந்தியாவின் ஓஎன்ஜிசி மற்றும் பிரான்சின் டோட்டல் எனர்ஜிஸ் - புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து

March 7, 2023

இந்தியாவைச் சேர்ந்த முன்னணி எண்ணெய் நிறுவனமான ஓஎன்ஜிசி, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டோட்டல் எனர்ஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியா, உலகின் 3வது பெரிய எண்ணெய் இறக்குமதியாளராக உள்ளது. இறக்குமதிகள் உயர்வதால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்படையும். எனவே, இறக்குமதியை குறைக்கும் நோக்கில், பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்காக டோட்டல் எனர்ஜிஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம், கார்பன் சமநிலையை எட்டுவதற்கான […]

இந்தியாவைச் சேர்ந்த முன்னணி எண்ணெய் நிறுவனமான ஓஎன்ஜிசி, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டோட்டல் எனர்ஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியா, உலகின் 3வது பெரிய எண்ணெய் இறக்குமதியாளராக உள்ளது. இறக்குமதிகள் உயர்வதால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்படையும். எனவே, இறக்குமதியை குறைக்கும் நோக்கில், பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்காக டோட்டல் எனர்ஜிஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம், கார்பன் சமநிலையை எட்டுவதற்கான வழிமுறைகள் பரிமாறப்படும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன், மகாநதி, அந்தமான் மற்றும் இந்தியாவின் கிழக்கு கடற்கரையோரம் உள்ள ஆழ்கடல் எண்ணெய் கிணறுகளை ஆராய்ந்து செயல்பட இந்த ஒப்பந்தம் துணை புரியும் என சொல்லப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu