வெங்காய ஏற்றுமதி தடை காலவரையின்றி நீட்டிப்பு

March 25, 2024

கடந்த டிசம்பர் மாதத்தில், வெங்காய ஏற்றுமதியை இந்திய அரசு தடை செய்தது. உள்நாட்டில் வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக ஏற்றுமதி தடை செய்யப்பட்டது. இந்த ஏற்றுமதி தடை மார்ச் 31 வரை இருக்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, மாரு அறிவிப்பு வரும் வரை ஏற்றுமதி தடையை காலவரையின்றி நீட்டிப்பு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வெங்காய விவசாயிகளுக்கு பேரிழப்பு நிகழ்ந்து வருவதாக வேளாண் சங்கங்கள் தெரிவித்து வருகின்றன. சின்ன வெங்காயம் மற்றும் […]

கடந்த டிசம்பர் மாதத்தில், வெங்காய ஏற்றுமதியை இந்திய அரசு தடை செய்தது. உள்நாட்டில் வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக ஏற்றுமதி தடை செய்யப்பட்டது. இந்த ஏற்றுமதி தடை மார்ச் 31 வரை இருக்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, மாரு அறிவிப்பு வரும் வரை ஏற்றுமதி தடையை காலவரையின்றி நீட்டிப்பு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வெங்காய விவசாயிகளுக்கு பேரிழப்பு நிகழ்ந்து வருவதாக வேளாண் சங்கங்கள் தெரிவித்து வருகின்றன. சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் ஆகிய இரண்டுக்கும் ஒரே ஏற்றுமதி குறியீட்டு எண் கொடுக்கப்பட்டுள்ளதால், இரண்டின் ஏற்றுமதியும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் ஏற்றுமதி வெங்காயத்தை நம்பி இருக்கும் மலேசியா, அமீரகம் போன்ற நாடுகளும் இதனால் பாதிப்படைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, ஏற்றுமதி தடையை விரைவில் நீக்க கோரி வேளாண் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu