வெங்காயம் கிலோ ரூ.35லிருந்து ரூ.90ஆக அதிகரிப்பு

October 14, 2022

வெங்காயம் விலை கிலோ ரூ.35லிருந்து ரூ.90ஆக அதிகரித்துள்ளது. தொடர் மழை காரணமாக திண்டுக்கல்லில் வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்து இருக்கிறது. திண்டுக்கல்லில் வெங்காயத்திற்கென தனி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு சின்ன வெங்காயம் தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, சேலம், முசிறி போன்ற இடங்களிலிருந்தும், பெரிய வெங்காயம் மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களிலிருந்தும் கொண்டு வரப்படுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை சின்ன வெங்காயத்தின் விலை அதன் தரத்தை பொறுத்து ரூ.30 முதல் ரூ.35 […]

வெங்காயம் விலை கிலோ ரூ.35லிருந்து ரூ.90ஆக அதிகரித்துள்ளது.

தொடர் மழை காரணமாக திண்டுக்கல்லில் வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்து இருக்கிறது. திண்டுக்கல்லில் வெங்காயத்திற்கென தனி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு சின்ன வெங்காயம் தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, சேலம், முசிறி போன்ற இடங்களிலிருந்தும், பெரிய வெங்காயம் மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களிலிருந்தும் கொண்டு வரப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை சின்ன வெங்காயத்தின் விலை அதன் தரத்தை பொறுத்து ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதன் எதிரொலியாக சின்ன வெங்காயத்தின் விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.90ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் பெரிய வெங்காயத்தினை வாங்குகின்றனர். இதனால், கடந்த ஜனவரி முதல் தற்போது வரை ரூ.20 முதல் ரூ.30 வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் விலை தற்போது உயர்ந்துள்ளது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் வெங்காயத்தின் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu