மத்திய அரசு கடந்த மாதம் வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரியை விதித்தது.
வெங்காய பற்றாக்குறையை சமாளிக்க வெங்காயத்தின் ஏற்றுமதிக்கு 40 சதவீத வரியை மத்திய அரசு விதித்தது. இதற்கு விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக நாசிக் மாவட்டத்தில் வெங்காய சந்தைகளில் ஏலம் நிறுத்தப்பட்டது. மேலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். இது மாவட்டத்தில் மிகப்பெரிய வெங்காய சந்தை ஆகும். மத்திய மற்றும் மகாராஷ்டிரா அரசின் பேச்சு வார்த்தையை தொடர்ந்து வியாபாரிகள் போராட்டத்தை தள்ளி வைத்தனர். இந்த போராட்டம் இரண்டாவது நாளாக நடந்த நிலையில் ஏலத்திற்காக கொண்டு வந்த வெங்காய மூட்டைகள் சந்தையில் தேங்கின. இதனால் வெங்காய விநியோகம் பாதிக்கப்பட்டு விலை உயர வாய்ப்புள்ளது.