நீட் தேர்வுக்கு இணைய வழியாக விண்ணப்பப் பதிவு மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு மே மாதம் ஐந்தாம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாணவர்கள் இன்று முதல் இணைய வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம். nta.ac.in.neet, nta.ac.exams ஆகிய இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இதற்கான அவகாசம் மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி இரவு 9 மணி வரை என்று கூறப்பட்டுள்ளது. இந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெறுபவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும்.
நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வருகிறார்கள். தற்போது பிளஸ் டூ தேர்வு எழுதுபவர்கள் மற்றும் ஏற்கனவே எழுதி எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதவர்கள் என அனைவரும் எழுத தயாராகியுள்ளனர். தேர்வு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் மாணவர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.