தமிழகத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும். இதில் அதிகம் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இங்கு ஜனவரி முதல் மே மாதம் வரை கோவில் திருவிழாக்களில் பகுதியாக ஜல்லிக்கட்டு காணப்படும். இந்த வருடம் புத்தாண்டில் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை கந்தகோட்டை அருகே உள்ள தச்சன்குறிச்சியில் நடைபெறுவது வழக்கம். அதன்படி நாளை மறுநாள் தச்சன்குறிச்சியில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பங்கேற்கும் காளைகளுக்கு ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. ஆன்லைனில் பதிவு செய்த மாடுபிடி வீரர்கள் காளைகளின் உரிமையாளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.