ஆன்லைன் சூதாட்டம் தடையை மீறினால் 3 ஆண்டு ஜெயில் தண்டனை

November 10, 2023

இணையவழி சூதாட்டம் தடை ஒழுங்குபடுத்துதல் சட்டத்தை மீறுபவர்கள் மீது சிறை தண்டனை விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி தமிழ்நாடு இணையவழி சூதாட்ட தடை ஒழுங்குபடுத்துதல் சட்டம் கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது திருப்பி அனுப்பபட்டதை தொடர்ந்து இந்த மசோதா கடந்த மார்ச் 23ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இது மறுநாளே கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இந்த மசோதா கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி […]

இணையவழி சூதாட்டம் தடை ஒழுங்குபடுத்துதல் சட்டத்தை மீறுபவர்கள் மீது சிறை தண்டனை விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி தமிழ்நாடு இணையவழி சூதாட்ட தடை ஒழுங்குபடுத்துதல் சட்டம் கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது திருப்பி அனுப்பபட்டதை தொடர்ந்து இந்த மசோதா கடந்த மார்ச் 23ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இது மறுநாளே கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இந்த மசோதா கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டு அமுலுக்கு வந்தது.

இதன்படி இணைய வழி சூதாட்டத்தில் ஈடுபட்டால் 3 மாத சிறை அல்லது ரூபாய் 5000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இதில் விளம்பரத்தில் ஈடுபட்டால் ஓராண்டு சிறை அல்லது 5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். மேலும் இது போன்ற விளையாட்டுகள் அளிப்பவருக்கு 3 ஆண்டு சிறை அல்லது 10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். மேலும் மீண்டும் மீண்டும் தடையை மீறினால் 10 ஆண்டு சிறை அல்லது 20 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu