மத்திய அரசு கொண்டு வந்த புதிய கேமிங் மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது. இந்த மசோதா சட்டமாகும் பட்சத்தில், ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் கேம்கள் தடை செய்யப்படும்.
இதனால் கிரிக்கெட் பெட்டிங் தளங்கள் மற்றும் பல பெரிய நிறுவனங்கள் பாதிக்கப்பட உள்ளன. குறிப்பாக Dream 11 மற்றும் MPL ஆகிய நிறுவனங்கள், தங்கள் தளங்களில் நிஜ பணம் வைத்து விளையாடும் கேம்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. Dream 11 நிறுவனத்தின் தாய் நிறுவனம் Dream Sports மற்றும் MPL இரண்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன. MPL தனது LinkedIn பக்கத்தில் உடனடியாக இந்த அறிவிப்பு அமலுக்கு வரும் என உறுதிப்படுத்தியுள்ளது.