ஆன்லைன் விளையாட்டுகளில் பணம் சம்பாதித்தவர்கள், வருமான வரி அறிக்கையை மறு தாக்கல் செய்ய வேண்டும் - அறிவிப்பு

ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் பணம் சம்பாதித்தவர்கள் தங்களது வருமான வரி அறிக்கையை மறு தாக்கல் செய்ய வேண்டும் என்று நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம் அறிவித்துள்ளது. இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த ஆண்டிற்கான பட்ஜெட் உரையில், திருத்தம் செய்யப்பட்ட வருமான வரி தாக்குதல் குறித்து அறிவித்தார். இதன்படி, வருமானவரி தாக்கல் செய்ய மறந்தவர்கள், வரி தாக்கலின் போது தவறு செய்தவர்கள் மற்றும் கூடுதல் வருமானம் குறித்த விவரங்களைச் சேர்க்க விரும்புபவர்களுக்கு வருமான வரி அறிக்கையை […]

ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் பணம் சம்பாதித்தவர்கள் தங்களது வருமான வரி அறிக்கையை மறு தாக்கல் செய்ய வேண்டும் என்று நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த ஆண்டிற்கான பட்ஜெட் உரையில், திருத்தம் செய்யப்பட்ட வருமான வரி தாக்குதல் குறித்து அறிவித்தார். இதன்படி, வருமானவரி தாக்கல் செய்ய மறந்தவர்கள், வரி தாக்கலின் போது தவறு செய்தவர்கள் மற்றும் கூடுதல் வருமானம் குறித்த விவரங்களைச் சேர்க்க விரும்புபவர்களுக்கு வருமான வரி அறிக்கையை மறு தாக்கல் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. மறு தாக்கலை, மதிப்பீட்டு ஆண்டு முடிந்து இரண்டு ஆண்டுகளுக்குள் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. கூடுதல் வருமானமாக காண்பிக்கப்படும் தொகையில், 25% முதல் 50% வரை வரி வசூல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், திருத்தம் செய்யப்பட்ட வருமான வரி தாக்கல் குறித்த முறையான காரணத்தை வரி செலுத்துவோர் கட்டாயமாக குறிப்பிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், வரி தாக்கல் செய்யும்போது ஏற்படும் தவறுகளை திருத்துவதற்கு அந்த ஆண்டின் டிசம்பர் 31ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்படும் என்றும் அதன் பிறகு தவறுகளை சரி செய்ய முடியாது என்றும் கூறப்பட்டது. தற்போது, இந்த வசதியைப் பயன்படுத்தி, ஆன்லைனில் பணம் சம்பாதிப்பவர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, லாட்டரி, சூதாட்டம், ஆன்லைன் விளையாட்டுகள் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் வருமானத்தை கணக்கில் காட்டி, வருமான வரி அறிக்கையை மறு தாக்கல் செய்ய வேண்டும் என்ற அறிவிப்பை நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா கூறியுள்ளார். மேலும், “கணக்கில் காட்டப்படாத வருமானம் குறித்து, அரசாங்கம், சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு முன்னர் அல்லது அபராதம் விதிக்கப்படுவதற்கு முன்னர், குறித்த வருமானத்தை கணக்கில் காட்ட அனைவருக்கும் வாய்ப்பு மற்றும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறினார். மேலும், இதன் மூலம், அனைத்து வித வருமானத்தையும் ஒழுங்குபடுத்த முடியும் என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu