விவேகானந்தர் பாறைக்குச் செல்லும் படகு பயணத்திற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி ஆகஸ்ட் 8 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சூரிய உதயம், திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை ஆகியவை பிரபலமான சுற்றுலா தலங்களாக உள்ளன. தினசரி நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.இந்நிலையில், விவேகானந்தர் பாறைக்குச் செல்லும் படகு பயணத்திற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி ஆகஸ்ட் 8 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் டிக்கெட்டுகள் கவுண்டர்களில் மட்டுமே கிடைக்கக் கூடிய நிலை இருந்தது. இப்போது, பயணிகள் https://www.psckfs.tn.gov.in என்ற அரசு இணையதளத்தின் மூலம் தங்களது பயணத்திற்கான டிக்கெட்டுகளை முன்னதாகவே எளிதாகப் பதிவு செய்து கொள்ளலாம். இது கூட்டத்தை தவிர்க்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும் பயணிகளுக்கு பெரிதும் உதவக்கூடியதாக இருக்கும்.














