முன்பதிபு இல்லாத ரயில் பயணச்சீட்டுக்களை ஆன்லைன் முறையில் பெறும் வசதி மூலம் 10 மாதங்களில் இரண்டரை கோடி பேர் பயனடைந்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தரப்பில் முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட்டுக்களை UTS செயலி மூலம் ஆன்லைனில் பெறும் வசதியை ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம், சீசன் டிக்கெட்டுகள், பிளாட்பாரம் டிக்கெட்டுகள் ஆகியவற்றையும் பெற முடியும். ரயில் நிலையத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருந்தபடி, பயணச்சீட்டை பதிவு செய்து கொள்ளலாம்.
தெற்கு ரயில்வே பிரிவில் ஏப்ரல் 2022 முதல் ஜனவரி 2023 வரை பத்து மாதத்தில் மொபைல் போன் மூலம் 50.75 லட்சம் பயணச் சீட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் 2.51 கோடி பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி பயணச் சீட்டுகளை பதிவு செய்து ரயில்களில் பயணித்துள்ளனர். இதன் மூலம் பயணச் சீட்டு வருமானமாக ரூ. 24.82 கோடி ஈட்டப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.