ட்விட்டரில் ஒரு நாளைக்கு 1000 பதிவுகள் மட்டுமே பார்க்க முடியும் என்று டுவிட்டர் பயனர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் நேற்று டுவிட்டர் திடீரென்று முடங்கியது. இதையடுத்து இப்பிரச்சினையை சரி செய்யும் நடவடிக்கையில் டுவிட்டர் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் டுவிட்டர் பயனர்கள் தெரிவித்த புகாருக்கு பதில் அளிக்கும் வகையில் எலான் மஸ்க், தற்காலிகமாக புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அதன்படி சரிபார்க்கப்பட்ட பயனர்கள் ஒரு நாளைக்கு 6 ஆயிரம் பதிவுகளை மட்டுமே படிக்க முடியும் என்றும், சரிபார்க்கப்படாத பயனர்கள் ஒரு நாளைக்கு 600 பதிவுகளையும், புதிய சரிபார்க்கப்படாத பயனர்கள் ஒரு நாளைக்கு 300 பதிவுகளை படிக்க முடியும் என்றும் அறிவித்தார். அதன் பின் இந்த உச்ச வரம்பை உயர்த்தினார். சரிபார்க்கப்பட்ட பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பதிவுகளை படிக்க முடியும் என்றும், சரிபார்க்கப்படாத பயனர்களுக்கு 1000 ஆகவும், புதிய சரிபார்க்கப்படாத பயனர்களுக்கு 500 ஆகவும் அதிகரிப்பதாக தெரிவித்தார். தேவையற்ற தகவல்களை அழிப்பதற்காக இந்த தற்காலிக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.