அமெரிக்கா - கைதுக்கு பிறகு ஜாமீனில் வெளிவந்த டிரம்ப்

April 5, 2023

நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நேற்று கைதான அவர், உடனடியாக ஜாமினில் வெளிவந்துள்ளார். மான்ஹட்டன் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக ஆஜராக வந்த அவர், முறைப்படி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஜாமினில் வெளிவந்த டிரம்ப், "இதுபோன்ற சம்பவம் அமெரிக்காவில் நடக்கும் என்று நான் நினைத்துப் பார்த்ததில்லை. இது அமெரிக்காவுக்கே இழுக்காக மாறிவிட்டது. தேசத்தை அழிக்க நினைப்பவர்களை எதிர்த்து அச்சமின்றி போராடியது மட்டுமே […]

நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நேற்று கைதான அவர், உடனடியாக ஜாமினில் வெளிவந்துள்ளார். மான்ஹட்டன் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக ஆஜராக வந்த அவர், முறைப்படி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜாமினில் வெளிவந்த டிரம்ப், "இதுபோன்ற சம்பவம் அமெரிக்காவில் நடக்கும் என்று நான் நினைத்துப் பார்த்ததில்லை. இது அமெரிக்காவுக்கே இழுக்காக மாறிவிட்டது. தேசத்தை அழிக்க நினைப்பவர்களை எதிர்த்து அச்சமின்றி போராடியது மட்டுமே நான் செய்த ஒரே குற்றம். அமெரிக்கா வரலாற்றில் ஒரு இருண்ட காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகமே அமெரிக்காவைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறது" என்று பேசி உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu