பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் - ஐ.நா.வில் மெக்சிகோ பாராட்டு

September 24, 2022

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே அமைதிக்கு வழிவகுக்கும் விதமாக பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் நரேந்திர மோடி, போப் பிரான்சிஸ் ஆகியோர் அடங்கிய குழுவை ஏற்பாடு செய்யுமாறு ஐ.நா.சபையில் மெக்சிகோ வெளியுறவுத்துறை அமைச்சர் மார்செலோ லூயிஸ் எப்ரார்டு கேட்டுக் கொண்டார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய மெக்சிகோ வெளியுறவுத்துறை அமைச்சர், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் மோடி புடினிடம் போரை நிறுத்துமாறு ௯றினார். அதை குறிப்பிட்டு ரஷ்யா- உக்ரைன் […]

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே அமைதிக்கு வழிவகுக்கும் விதமாக
பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் நரேந்திர மோடி, போப் பிரான்சிஸ் ஆகியோர் அடங்கிய குழுவை ஏற்பாடு செய்யுமாறு ஐ.நா.சபையில் மெக்சிகோ வெளியுறவுத்துறை அமைச்சர் மார்செலோ லூயிஸ் எப்ரார்டு கேட்டுக் கொண்டார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய மெக்சிகோ வெளியுறவுத்துறை அமைச்சர், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் மோடி புடினிடம் போரை நிறுத்துமாறு ௯றினார். அதை குறிப்பிட்டு ரஷ்யா- உக்ரைன் இடையே அமைதியை ஏற்படுத்தும் பிரதமர் மோடியின் முயற்சிக்கு மார்செலோ பாராட்டு தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் கருத்துக்கு அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. அச்சமயம் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸிடம் மார்செலோ ரஷ்யா- உக்ரைன் இடையேயான போரை நிறுத்துவதற்கு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஒ௫ குழுவை நியமிக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும் அக்குழுவில் பிரதமர் நரேந்திர மோடி, போப் பிரான்சிஸ் ஆகிய உலக தலைவர்கள் இடம்பெற வேண்டும் எனவும் ௯றினார். அக்குழுவின் பேச்சுவார்த்தையானது நாடுகளின் ஒற்றுமையை அதிகரிப்பது மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதற்கும் பதட்டங்களைக் குறைப்பதற்கும் உதவும் வகையில் இ௫க்கும் என்று ௯றினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu