ஜப்பானின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான சாஃப்ட் பேங்க், செயற்கை நுண்ணறிவு துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள OpenAI நிறுவனத்தில் பெரும் முதலீடு செய்ய உள்ளது. OpenAI நிறுவனத்தின் ஊழியர்கள் தங்களது பங்குகளை சாஃப்ட் பேங்கிற்கு விற்பனை செய்யும் வாய்ப்பை வழங்கியுள்ளது. இதன் மூலம், OpenAI ஊழியர்கள் கோடீஸ்வரராக மாறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அக்டோபர் மாதம் OpenAI நிறுவனத்தில் $500 மில்லியன் முதலீடு செய்த சாஃப்ட் பேங்க், தற்போது $1.5 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை வாங்கும் முயற்சியில் உள்ளது. இதன் மூலம் OpenAI நிறுவனத்தில் சாஃப்ட் பேங்கின் பங்கு அதிகரிக்கும். OpenAI நிறுவனத்தின் மதிப்பு தற்போது $157 பில்லியனாக உள்ளது குறிப்பிடத்தக்கது.