இந்தியாவுக்கு வருகை தரும் சாம் அல்ட்மேன்

June 5, 2023

சாட் ஜிபிடி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உலகுக்கு அறிமுகம் செய்தவர் - ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் அல்ட்மேன் ஆவார். அவர், இந்த வாரத்தில், இஸ்ரேல், ஜோர்டான், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார். உலகமே வேகமாக செயற்கை நுண்ணறிவை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், சாம் அல்ட்மேனின் இந்திய பயணம் கவனம் ஈர்த்துள்ளது. இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு திறன் சார்ந்த […]

சாட் ஜிபிடி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உலகுக்கு அறிமுகம் செய்தவர் - ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் அல்ட்மேன் ஆவார். அவர், இந்த வாரத்தில், இஸ்ரேல், ஜோர்டான், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார். உலகமே வேகமாக செயற்கை நுண்ணறிவை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், சாம் அல்ட்மேனின் இந்திய பயணம் கவனம் ஈர்த்துள்ளது. இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு திறன் சார்ந்த மிகப்பெரிய மனித வளம் உள்ளது. எனவே, அவரது வருகை இரு தரப்பிலும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும், அவரது வருகை மூலம், இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு முன்னெடுப்புகள் தொடங்கப்படலாம் என்று கருதப்படுகிறது. அவரது வருகையின் போது, அவர் சந்திக்க உள்ள நபர்கள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu