சாம் ஆல்ட்மேன் தலைமையிலான ஓபன் ஏஐ, தனது புதிய கருவியான சோறா டர்போ-வை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், உங்கள் மனதில் உள்ள காட்சிகளை, வார்த்தைகளால் விவரித்து, சில வினாடிகளில் அழகான வீடியோக்களாக மாற்றிவிடலாம். இந்த கருவியை பயன்படுத்த சாட் ஜிபிடி பிளஸ் அல்லது ப்ரோ சந்தா தேவை.
இந்த கருவி மூலம், நீங்கள் 20 வினாடிகள் நீளமுள்ள, 1080p தரமுள்ள வீடியோக்களை உருவாக்கலாம். இதில், ‘ரீமிக்ஸ்’ என்ற அம்சம் மூலம் உங்கள் வீடியோக்களை திருத்திக்கொள்ளலாம். ‘ஸ்டோரிபோர்டு’ என்ற அம்சம் உங்கள் வீடியோக்களை காட்சிப்படுத்த உதவும். மேலும், ‘பிளெண்ட்’ என்ற அம்சம் மூலம் பல வீடியோ கிளிப்களை ஒன்றாக இணைத்து ஒரு தொடர்ச்சியான வீடியோவாக மாற்றிக்கொள்ளலாம். தற்போது, இந்த கருவியை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பல அற்புதமான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.