செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் சாட் ஜிபிடி சாட்பாட்டை வடிவமைத்த ஓபன் ஏஐ நிறுவனம், தற்போது அதன் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனை வெளியிட்டுள்ளது. சாட் ஜிபிடி 4o என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.
ஜிபிடி 4 மாடலின் மேம்படுத்தல் வெர்ஷனாக சாட் ஜிபிடி 4o வெளியாகிறது. இதில், டெக்ஸ்ட், ஆடியோ மற்றும் வீடியோ போன்ற பல்வேறு அம்சங்களில் வேகமான செயல்பாடு மற்றும் அதிக திறன் புகுத்தப்பட்டுள்ளது. சாட் ஜிபிடி கருவியை இலவசமாக பயன்படுத்துவோருக்கும் இந்த மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஜெமினி ஏஐ மாடல் வெளியீட்டுக்கு முன்னதாக சாட் ஜிபிடி 4o வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.