சீனாவில் கொரோனாவை கட்டுப்படுத்த 45 ஆயிரம் காய்ச்சல் சிகிச்சைபிரிவுகள் திறப்பு

December 15, 2022

சீனாவில் கொரோனாவை கட்டுப்படுத்த 45 ஆயிரம் காய்ச்சல் சிகிச்சைபிரிவுகள் திறக்கப்பட்டுள்ளன. சீனாவில் பல நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களால் அரசுக்கு நெருக்கடியும் ஏற்பட்டது. பொதுமக்கள் போராட்டம் எதிரொலியாக சீனாவில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டன. கொரோனா தடுப்பு மையங்களும் மூடப்பட்டன. தற்போது பரிசோதனைகள் குறைக்கப்பட்டதால் தினசரி பாதிப்புகளும் குறைந்து உள்ளது. இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த சீனாவில் காய்ச்சல் கிளீனிக்குகளை திறக்க அந்நாட்டு […]

சீனாவில் கொரோனாவை கட்டுப்படுத்த 45 ஆயிரம் காய்ச்சல் சிகிச்சைபிரிவுகள் திறக்கப்பட்டுள்ளன.

சீனாவில் பல நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களால் அரசுக்கு நெருக்கடியும் ஏற்பட்டது. பொதுமக்கள் போராட்டம் எதிரொலியாக சீனாவில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டன. கொரோனா தடுப்பு மையங்களும் மூடப்பட்டன. தற்போது பரிசோதனைகள் குறைக்கப்பட்டதால் தினசரி பாதிப்புகளும் குறைந்து உள்ளது.

இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த சீனாவில் காய்ச்சல் கிளீனிக்குகளை திறக்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது. அதன்படி அங்குள்ள 47 பொது மருத்துவமனைகளில் 14 ஆயிரம் காய்ச்சல் சிகிச்சைபிரிவு களும் சமுதாய மருத்துவமனைகளில் 33 ஆயிரம் சிகிச்சைபிரிவுகளும் திறக்கப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் இந்த சிகிச்சைபிரிவுகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு கேட்டுக்கொண்டு உள்ளது.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu