தமிழகத்தில் வரும் ஜூன் 6-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
நாடெங்கிலும் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால், அதை ஒட்டி பள்ளி இறுதித் தேர்வுகள் விரைவாக முடிக்கப்பட்டது. தற்போது, ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அடுத்த கல்வியாண்டுக்கு பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. நிகழாண்டில் மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாட்கள் அதிகரித்துள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். வரும் ஜூன் 6ஆம் தேதி ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. கல்வி அதிகாரிகள் இதற்கான பணிகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.














