பொதுமக்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வசதியாக 10000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வருகின்ற 17 மற்றும் 18ஆம் தேதிகளில் சென்னையிலிருந்து தினசரி இயங்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 2970 பேருந்துகள் என இரண்டு நாட்களுக்கும் சேர்த்து 7154 பேருந்துகளும் பிற ஊர்களில் இருந்து இரண்டு நாட்களுக்கும் சேர்த்து மொத்தம் 10,216 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு பெரும்பான்மையான தடங்களில் முழுமையாக செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக பயணிகள் தங்கள் பயணத்தை 16,17 ஆம் தேதிகளில் முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.