ரூ.1.50 கோடி செலவில் கண் மருத்துவப் பிரிவு சேவை வாகனங்கள் 

April 18, 2023

ரூ.1.50 கோடி செலவில் 5 மாவட்டங்களுக்கான நடமாடும் பன்நோக்கு கண் மருத்துவப் பிரிவு சேவை வாகனங்களை கொடியசைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 2021-22ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில் கரூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு நடமாடும் கண் சிகிச்சை வாகனங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கரூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, தஞ்சாவூர் மற்றும் கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் தமிழ்நாடு நலவாழ்வுக் குழும நிதி உதவியுடன் […]

ரூ.1.50 கோடி செலவில் 5 மாவட்டங்களுக்கான நடமாடும் பன்நோக்கு கண் மருத்துவப் பிரிவு சேவை வாகனங்களை கொடியசைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

2021-22ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில் கரூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு நடமாடும் கண் சிகிச்சை வாகனங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கரூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, தஞ்சாவூர் மற்றும் கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் தமிழ்நாடு நலவாழ்வுக் குழும நிதி உதவியுடன் 1.50 கோடி ரூபாய் செலவில் நடமாடும் பன்நோக்கு கண் மருத்துவப் பிரிவு சேவைக்கான 5 வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இத்திட்டம் தமிழ்நாடு, கண்புரை பார்வையிழப்பு இல்லா மாநிலமாக விளங்கிட பெரிதும் உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu