பார்சிலோனா நகரில் 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச கைபேசிகள் கண்காட்சி, 'வேர்ல்ட் மொபைல் காங்கிரஸ்' என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. தொழில்நுட்பத் துறையின் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் இந்த கண்காட்சியில் அரங்கேறி வருகின்றன. அதில், ஒப்போ, டெக்னோ, ஹானர், மோட்டோரோலா போன்ற நிறுவனங்கள், போல்டபிள் ஸ்மார்ட் ஃபோன்களை அறிமுகம் செய்துள்ளன. இது, கண்காட்சியின் மிகவும் கவனம் ஈர்த்த நிகழ்வாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒப்போ நிறுவனம், ஃபைண்ட் N2, ப்ளிப் போல்டபிள் போனை அறிமுகம் செய்துள்ளது. இது சாம்சங் கேலக்ஸியின் ப்ளிப் மாடலைப் போல உள்ளதாக கூறப்படுகிறது. இதில், 6.8 இன்ச் டிஸ்ப்ளே, 3.26 இன்ச் ஆக போல்ட் செய்யப்பட்டுள்ளது. இதே பாணியில், ஒன் பிளஸ் நிறுவனத்தின் கைபேசிகள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. அடுத்ததாக, ஹுவாய் நிறுவனம், பி50 பாக்கெட் என்ற பெயரில் போல்டபிள் போனை அறிமுகம் செய்துள்ளது. இதில், 6.9 இன்ச் அளவுக்கு உள்ள டிஸ்ப்ளே, 1 இன்ச் அளவுக்கு சுருக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மூன்றாவதாக, ஹானர் நிறுவனம், மேஜிக் விஎஸ் என்ற பெயரிலும், டெக்னோ நிறுவனம், ஃபேன்டம் ஃபோல்ட் என்ற பெயரிலும் மடக்கு கைபேசிகளை அறிமுகம் செய்துள்ளன. பிரபல மோட்டோரோலா நிறுவனம், ரோல் டிஸ்பிளே வசதியுடன் கூடிய கைபேசியை அறிமுகம் செய்துள்ளது. இதில், 5 இன்ச் டிஸ்ப்ளேயை 6.5 இன்ச் அளவுக்கு விரிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.