இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் சேர மாணவர்களுக்கு வாய்ப்பு - இஸ்ரோ

February 19, 2024

இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் சேர நாளை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என இஸ்ரோ அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்களிடையே விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் பற்றிய அடிப்படை அறிவை வழங்குவதற்காக இளம் விஞ்ஞானிகள் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி குழந்தைகளுக்காக யுவ விஞ்ஞானி கர்யக்ராம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 111,153 மற்றும் 337 மாணவர்களின் […]

இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் சேர நாளை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

பள்ளி மாணவர்களிடையே விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் பற்றிய அடிப்படை அறிவை வழங்குவதற்காக இளம் விஞ்ஞானிகள் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி குழந்தைகளுக்காக யுவ விஞ்ஞானி கர்யக்ராம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 111,153 மற்றும் 337 மாணவர்களின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஐந்து குழுக்கள் ஆக பிரிக்கப்பட்டு பயிற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டு இந்த திட்டத்தில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் நாளை முதல் மார்ச் 1 ஆம் தேதி வரை https://jigyasa.iirs.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இரண்டு வார கால வகுப்பறை பயிற்சி, பரிசோதனைகளின் செயல்முறை விளக்கம், போட்டிகள், ரோபோடிக்ஸ் ஆகிய திட்டங்கள் இதில் அடங்கும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu