நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழா - எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

வரும் மே 28ஆம் தேதி, புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட உள்ளது. இந்த கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என செய்தி வெளிவந்துள்ளது. எனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, சிவசேனா, கம்யூனிஸ்ட் பிரிவு கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 19 எதிர்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளன. […]

வரும் மே 28ஆம் தேதி, புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட உள்ளது. இந்த கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என செய்தி வெளிவந்துள்ளது. எனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, சிவசேனா, கம்யூனிஸ்ட் பிரிவு கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 19 எதிர்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளன.

திறப்பு விழாவுக்கான புறக்கணிப்பு குறித்து, அனைத்து கட்சிகளும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், குடியரசு தலைவரை நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு அழைக்காதது அவரை அவமதிப்பது போல் ஆகும் எனவும், ஜனநாயக முறைக்கு எதிரானதாக உள்ளது எனவும், கூறப்பட்டுள்ளது. மேலும், கட்டிட திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரே தலைமை ஏற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu