உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிராக கொழும்புவில் எதிர்கட்சிகள் போராட்டம்

February 28, 2023

உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிராக கொழும்புவில் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தினர். பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கையில், அடுத்த மாத தொடக்கத்தில் நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைப்பதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை தலைநகர் கொழும்புவில் எதிர்கட்சிகள் சார்பில் நேற்று பிரமாண்ட போராட்டம் நடைபெற்றது. எதிர்கட்சியான தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஆயிரகணக்கான தொண்டர்கள் அதிபர் மாளிகை, அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். இந்த போராட்டத்திற்கு […]

உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிராக கொழும்புவில் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தினர்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கையில், அடுத்த மாத தொடக்கத்தில் நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைப்பதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை தலைநகர் கொழும்புவில் எதிர்கட்சிகள் சார்பில் நேற்று பிரமாண்ட போராட்டம் நடைபெற்றது. எதிர்கட்சியான தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஆயிரகணக்கான தொண்டர்கள் அதிபர் மாளிகை, அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். இந்த போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்திருந்தனர்.

எனினும் போலீஸ் தடையை மீறி கொழும்புவில் பேரணியாக சென்றனர். அப்போது எதிர்கட்சியினர் மீது கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தண்ணீரை பீய்ச்சியடித்து போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர். இதில் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu