ஜூலை 17, 18 ஆம் தேதிகளில், பெங்களூருவில் எதிர்கட்சிகள் மாநாடு

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், சில தினங்களுக்கு முன்னர், பிஹார் மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் மாநாடு நடைபெற்றது. தற்போது, வரும் ஜூலை 17 மற்றும் 18 ஆம் தேதிகளில், கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் எதிர்க்கட்சிகளின் அடுத்த கட்ட மாநாடு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைமையான காங்கிரஸ் கட்சி இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. கட்சியின் பொது செயலாளர் கே சி […]

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், சில தினங்களுக்கு முன்னர், பிஹார் மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் மாநாடு நடைபெற்றது. தற்போது, வரும் ஜூலை 17 மற்றும் 18 ஆம் தேதிகளில், கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் எதிர்க்கட்சிகளின் அடுத்த கட்ட மாநாடு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைமையான காங்கிரஸ் கட்சி இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. கட்சியின் பொது செயலாளர் கே சி வேணுகோபால், இந்த செய்தியை ட்விட்டர் வாயிலாக அறிவித்துள்ளார். அதில், பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் சந்திப்பு வெற்றி அடைந்ததாகவும், அடுத்த கட்ட சந்திப்பு பெங்களூருவில் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது பாசிச அரசை வீழ்த்துவதற்கான மிக முக்கிய நகர்வு எனவும் தெரிவித்துள்ளார். இது நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் கூட்டணி எனவும் கூறியுள்ளார்.

முன்னதாக, இந்த மாநாடு ஜூலை 13 மற்றும் 14ம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. அதற்கு முன்னால், சிம்லாவில் மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டது. தற்போது, பெங்களூருவில் ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகள் இறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu