எதிர்க்கட்சி அமளி - நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

February 6, 2023

எதிர்க்கட்சியின் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை 11 மணிக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், அதானி குழும முறைகேடுகள் தொடர்பாக விசாரணை செய்ய நாடாளுமன்ற கூட்டுக்குழு அல்லது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மேற்பார்வையில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் […]

எதிர்க்கட்சியின் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை 11 மணிக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், அதானி குழும முறைகேடுகள் தொடர்பாக விசாரணை செய்ய நாடாளுமன்ற கூட்டுக்குழு அல்லது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மேற்பார்வையில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதனால் கடந்த இரண்டு அலுவல் நாட்களாக நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலை 11 மணிக்கு கூடியது. அதானி குழும விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இன்றும் நாடாளுன்றத்தில் அமளியில் ஈடுபட்டன. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைதிகாக்க வலியுறுத்தினார். ஆனாலும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளையும் நாளை காலை 11 மணிக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu