சுற்றுலா வர்த்தக வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, கடந்த ஆண்டு மே 7 ஆம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்துக்குள் வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டது. தற்போது, ஏப்ரல் மாதம் முதல் வார நாட்களில் 6,000 வாகனங்கள் மற்றும் வார இறுதியில் 8,000 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் காரணமாக, சுற்றுலா தொழில் மீது முழுமையாக சார்ந்துள்ள வியாபாரிகள், தங்கும் விடுதி உரிமையாளர்கள், சுற்றுலா வாகன உரிமையாளர்கள், உணவக உரிமையாளர்கள், விவசாயிகள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்ள உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், இந்த கட்டுப்பாடுகள் நீலகிரியின் சுற்றுலா வர்த்தக வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் மற்றும் வாகனங்களுக்கான கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என்று சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, ஏப்ரல் 1 ஆம் தேதி கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டமும், ஏப்ரல் 2 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்படும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.