கர்நாடகா தேர்தலில் இபிஎஸ்ஸை தொடர்ந்து அதிமுக வேட்பாளரை ஓபிஎஸ் அறிவித்தார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே 10 ஆம் தேதி நடைபெறுகிறது. 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் பெங்களூரு புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளரையும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ் நேற்று அறிவித்தார். அதிமுக சார்பில் டி.அன்பரசன் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம், புலிகேசி நகரில் அதிமுக தரப்பில் நெடுஞ்செழியன் அதிகாரபூர்வ வேட்பாளராக நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வாகி இருந்தாலும்கூட தேர்தல் ஆணையத்தில் அதிமுக பிரச்சினை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அதிமுக சார்பில் அவரும் பெங்களூரு புலிகேசி நகர் தொகுதிக்கு போட்டி வேட்பாளரை அறிவித்துள்ளார்.














