தொண்டன் என்ற பெயரில் பத்திரிக்கை மற்றும் டிவி சேனல் தொடங்கும் ஓபிஎஸ்

அதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடாக 'நமது எம்ஜிஆர்' மற்றும் டிவி சேனல் ஆக 'ஜெயா டிவி' இருந்து வந்தது. ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, கட்சி பிளவு பட்டது. தற்போது, இந்த இரு ஊடக நிறுவனங்களும் டிடிவி தினகரன் தரப்பால் இயக்கப்பட்டு வருகின்றன. அதே வேளையில், 'நமது அம்மா' என்ற நாளிதழையும், 'நியூஸ் ஜெ' என்ற டிவி சேனலையும் எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார். முன்னதாக, இது ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி […]

அதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடாக 'நமது எம்ஜிஆர்' மற்றும் டிவி சேனல் ஆக 'ஜெயா டிவி' இருந்து வந்தது. ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, கட்சி பிளவு பட்டது. தற்போது, இந்த இரு ஊடக நிறுவனங்களும் டிடிவி தினகரன் தரப்பால் இயக்கப்பட்டு வருகின்றன. அதே வேளையில், 'நமது அம்மா' என்ற நாளிதழையும், 'நியூஸ் ஜெ' என்ற டிவி சேனலையும் எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார். முன்னதாக, இது ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரால் இணைந்து தொடங்கப்பட்டாலும், தற்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதால், ஓ பன்னீர் செல்வத்திற்கு அதில் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. நாளிதழின் நிறுவனர் பட்டியலில் இருந்து அவர் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனது அணிக்கான பிரத்தியேக நாளிதழ் மற்றும் டிவி சேனல் இல்லை என்பது ஒரு குறையாக இருப்பதாக ஓ பன்னீர்செல்வம் தரப்பு கருதி வந்தது. எனவே, 'தொண்டன்' என்ற பெயரில் புதிய நாளிதழ் மற்றும் டிவி சேனலை தொடங்க ஓ பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், இது தொடர்பாக ஏற்கனவே பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருவதாக கூறப்படுகிறது. அடுத்த சில வாரங்களில், இவை பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu