தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக 19 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களான கோவை, நீலகிரி ஆகிய மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இது தவிர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.மேலும் இந்த மழை ஆறாம் தேதி வரை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் ஆகிய 19 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.














