வங்கக் கடலில் புயல் உருவாக உள்ளதால் தமிழகம், புதுச்சேரிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
தென் கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும். மேலும் இந்த புயல் எங்கு உருவாகும், எங்கு கரையை கடக்கும் என்பதை இனிவரும் நாட்களிலேயே கூற இயலும். இந்நிலையில் வங்கக்கடலில் வரும் இரண்டாம் தேதி புயல் உருவாக கூடும். இதனால் தமிழக மற்றும் புதுச்சேரிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த ஐந்து நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் கனமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.