கேரளாவில் பருவமழை தீவிரம் ஒன்பது மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை

கேரளாவில் மீண்டும் பருவமழை தீவிரமடைவதை தொடர்ந்து ஒன்பது மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்கியுள்ளதை தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக மலை பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. மேலும் தாமரைசேரி பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் ஆங்காங்கே காற்று பலமாக வீசியதால் மரங்கள் சாய்ந்தன. மேலும் காற்றழுத்த தாழ்வு காரணமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு […]

கேரளாவில் மீண்டும் பருவமழை தீவிரமடைவதை தொடர்ந்து ஒன்பது மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்கியுள்ளதை தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக மலை பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. மேலும் தாமரைசேரி பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் ஆங்காங்கே காற்று பலமாக வீசியதால் மரங்கள் சாய்ந்தன. மேலும் காற்றழுத்த தாழ்வு காரணமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து வயநாடு மாவட்டத்திற்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பத்தினம் திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu