தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் அரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை வழங்குவதற்கு ஏற்பாடு செய்து உள்ளனர். மேலும் பொங்கல் தொகுப்பில் வெல்லம் வழங்க வேண்டும்,ரூபாய் ஆயிரம் ரொக்கத்தை வங்கியில் வரவு வைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் பொங்கல் பரிசு தொகையை வங்கி கணக்கில் வரவைப்பது தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும். வங்கியில் வரவு வைப்பதில் என்ன சிக்கல் உள்ளது எனவும், மகளிர் உரிமைத் தொகையை வங்கி கணக்கில் செலுத்துவது போல பரிசுத்தொகையையும் வங்கியில் வரவு வைக்கலாம். கரும்பு கொள்முதல்களுக்கும் விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம். மேலும் அடுத்த ஆண்டு சர்க்கரை க்கு பதில் வெல்லம் வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளன