மின் கட்டணம் செலுத்தாத அரசு அலுவலகங்களில் மின் இணைப்பை துண்டிக்க உத்தரவு

February 25, 2023

மின் கட்டணம் செலுத்தாத அரசு அலுவலகங்களில் மின் இணைப்பை துண்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் மின் வாரிய உயர் அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் மின்வாரிய செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மின்வாரிய தலைவர் வழங்கிய அறிவுறுத்தல்படி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள மின்வாரியம் முடிவெடுத்துள்ளது. இதன்படி அத்தியாவசிய சேவை வழங்கும் அரசுத்துறைகள் தவிர மின்சார கட்டணத்தில் நிலுவை வைத்திருக்கும் இதர அரசுத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று […]

மின் கட்டணம் செலுத்தாத அரசு அலுவலகங்களில் மின் இணைப்பை துண்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையில் மின் வாரிய உயர் அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் மின்வாரிய செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மின்வாரிய தலைவர் வழங்கிய அறிவுறுத்தல்படி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள மின்வாரியம் முடிவெடுத்துள்ளது. இதன்படி அத்தியாவசிய சேவை வழங்கும் அரசுத்துறைகள் தவிர மின்சார கட்டணத்தில் நிலுவை வைத்திருக்கும் இதர அரசுத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தெருவிளக்கு, குடிநீர் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவை வழங்கும் துறைகளுக்கு 7 நாட்களுக்குள் மின்கட்டணம் செலுத்துமாறு நோட்டீசு அனுப்ப வேண்டும் என்றும் இந்த பணிகளை இன்றைய தேதிக்குள் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu